வாயில்லா ஜீவன் கொரோனா பேசுகிறேன்!

Way to Paradise | சுவர்க்கத்தை நோக்கி · April 8, 2020 · கவிதைகள்

வாயில்லா ஜீவன் கரோனா பேசுகிறேன்! உங்களை அழிப்பது எப்போதும் என் நோக்கமல்ல! விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்து விட்டது! மருத்துவம் மகத்தான நிலையை அடைந்துவிட்டது மொபைல் போனுக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்க்கும் நீங்கள் அடிமைகள் எண்ணற்ற போர் விமானங்களை தயாரித் தீர்கள் எத்தனையோ கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உருவாக்கினீர்கள் அதில் ஏதேனும் ஒன்றை ஏவி யாவது என்னை கொன்றுவிடுங்கள் பார்க்கலாம் சூப்பர் பவர் நாடு நாங்கள் யாரை வேண்டுமானாலும் அழித்து விடுவோம் என்று கர்வத்தோடு பேசித் திரிந்தீர்களே ஆயிரம் அணுகுண்டுகளை வீசியது இப்போது என்னை அழித்து காட்டுங்கள் பார்க்கலாம் சாதியின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே பிரித்து வைத்தீர்கள் ஆனால் பாருங்கள் உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பரம்பரை இளவரசர் சார்லஸ்யையும் ஒருவேளை சோற்றுக்கே வழியில்லாத பாமரனையும் நான் சமமாய் நடத்துகின்றேன் ஆகவே உங்களை விட நான் மேன்மையானவனே என்னை இகழ உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை மதங்களின் பெயரைச் சொல்லி உங்களை நீங்களே கொன்று குவித்தீர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி பிழைப்பை நடத்தும் யாரேனும் ஒருவரை இப்போது அழைத்து என்னை மறையச் செய்யுங்கள் பார்க்கலாம் இனியேனும் இதுபோன்ற மனித வைரஸ் களிடம் மாட்டிக் கொள்ளாமல் சுய அறிவோடு இருங்கள் இந்த பூமியிலுள்ள உங்கள் அனைவருக்கும் நான் அளித்திருக்கும் அன்பு பரிசு தான் இந்த "தனிமை" அதில் சிறிது காலம் வாழ்ந்து பாருங்களேன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வுகளை துறந்து மனிதத்தை உணர்ந்து புதிய சிந்தனைகளோடு வெளியே வாருங்கள் அப்போது நான் உங்களை விட்டு நிரந்தரமாய் விடைபெற்று இருப்பேன் மனிதனை மனிதனாக மதிக்காத எந்த ஒரு சித்தாந்தமோ, கொள்கையோ, அல்லது மதமோ இந்த பூமியில் வெற்றி பெறப்போவதில்லை

Related Videos