சிந்திக்கவும், வியக்கவும் வைக்கும் இறுதி தூதரின் அறிவுரைகள்!
1. உழைப்பாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்து விடுங்கள்
2. அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்ல. உண்மையில் வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவன் ஆவான்.
3. உழைத்து உண்ணும் உணவே நீங்கள் உண்ணுகின்ற உணவில் மிகச் சிறந்ததாகும்
4. நிச்சயமாக உங்களில் மிகச்சிறந்தவர் நற்குணமுடையவரே
5. பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாய் இருங்கள்
6. யாசகம் கேட்போரை விரட்டி விடாதீர்கள்
7. வீட்டைத் தவிர வேறு இடங்களில் உங்கள் மனைவியர் மீது வெறுப்பை வெளிப்படுத்தாதீர்கள்.
8. ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்
9. கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கி விடும்
10. தனது கைகளாலும் நாவாலும் பிறருக்கு தொல்லை தராதவன் எவனோ அவனே நல்ல மனிதன் ஆவான்
11. பூமியில் உள்ள உயிர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள இறைவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான்
12. தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கு விரும்பாத வரை உங்களில் எவரும் இறை நம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்
13. வாழ்வாதாரம் விரிவடைய வேண்டும், ஆயுள் அதிகம் வேண்டும் என்று விரும்புகின்றவர் உறவுகளுடன் சேர்ந்து வாழட்டும்
14. கடனை திருப்பி செலுத்த சக்தி இருந்தும், காலதாமதம் செய்வது அநீதியாகும்.
15. நீங்கள் உண்மையையே பேசுங்கள் அது அழிவை தந்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.
16. மனிதர்களின் தவறுகளில் அதிகமானவை அவர்களின் நாவினால் தான் ஏற்படுகின்றன.
17. நீங்கள் ஓடும் ஆற்றின் கரையில் இருந்தாலும் தண்ணீரை வீணாக்காதீர்கள்!
18. உங்களில் ரு ஒவ்வொருவரும் தன் சகோதரரின் கண்ணாடி ஆவார் எனவே ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.
19. படைப்பினங்கள் மீது கருணை காட்டாதவருக்கு, படைத்தவன் கருணை காட்ட மாட்டான்.
20. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்த முறையில் நடந்து கொள்பவரே!
21. தனது அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறு நிரம்ப உண்பவர் இறை விசுவாசியாக மாட்டார்.
22. கொலை, அனாதைகளின் சொத்தை சாப்பிடுதல், வட்டி, கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது இவை அனைத்தும் அழிவை தரும் மிகப்பெரும் பாவங்கள்.
23. நல்ல சொற்களும், மலர்ந்த முகத்தோடு பார்ப்பதும் கூட தர்மமே!
24. தீங்கு தரும் பொருட்களை பாதையிலிருந்து அகற்றுவதும் தர்மமே!
25. நோயாளியை நலம் விசாரியுங்கள், மரம் நடுங்கள் அதுவும் தர்மமே!
26. மக்களை சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்பவனுக்கு கேடு தான்!
27. அரசாங்கப் போரின் போது கூட எதிரிகளின் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், மத குருமார்கள் ஆகியோரை கொள்ளக்கூடாது.
28. உயிரினங்களை துன்புறுத்தாதீர்கள், புறம் பேசாதீர்கள், பிறருடைய குறைகளை தேடாதீர்கள்!
29. கோபத்தின் போது கட்டுப்படுத்திக் கொள்பவனே உண்மையான வீரன்!
30. கெட்ட வார்த்தை பேசாதீர்கள்! பிறருடைய பெற்றோரை திட்டாதீர்கள்!
31. ஏமாற்று வியாபாரம் செய்யாதீர்கள்! உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யாதீர்கள்!
32. பிறருடைய நிலத்தை அபகரிக்காதீர்கள்!
33. அனாதை குழந்தைகளுக்கு முன் உங்களுடைய குழந்தைகளை கொஞ்சாதீர்கள்!






